தமிழக அரசின் ‘கலைச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 50 வயதைக் கடந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள் போன்றோர், நுண்கலைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதிற்கு படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதிக்குள் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், 2ம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-08 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.