தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும் நிகழ்வில் அவர்களது குடும்பத்திற்கு உதவி புரிய உருவாக்கப்பட்ட திட்டமே ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம் ஆகும்.

ஓய்வூதியர் இறக்க நேரிட்டால் தகுதியுடைய நியமனதாரர் ஓய்வூதியம் வழங்கும் அலுவலருக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இறப்புச் சான்றிதழ், ஓய்வூதியக் கொடுப்பாணையின் முதல் பக்க நகல், புகைப்படம், நியமனப் படிவம் ஆகிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.