தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.