தமிழகம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது… காவல்துறை ஆணையர்…!!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திர கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் வாக்களித்தனர். அதிலும் சில கட்சிகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கலவரம் செய்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்படும். மேலும் தேர்தல் அன்று விதிமீறல் தொடர்பாக 10 வழக்குகள் பதிவாகி உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *