தமிழகம் முழுவதும் 163 கல்லூரிகளில்…. B.A., B.Sc., B.Com., BBA, BCA…. 3,19,691 பேர் விண்ணப்பம்….!!!!

தமிழக முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அரசு கலை மற்றும் அறவியல் கல்லூரிகளில் பணிபுரிய விரும்பும் மாணவர்கள், www.tngasa.in, www.tngasa.org என்ற அதிகாரபூர்வ இணையதளம்மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7 ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் சேர  இதுவரை 3,19,691 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,61,569 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர். 2,30,788 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பக் கட்டணம் – ரூ.48.
  • பதிவுக் கட்டணம் – ரூ.2.
  • SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
  • SC / ST பிரிவினருக்கான பதிவுக் கட்டணம் – ரூ.2 மட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *