தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் வேஷ்டி மற்றும் சேலைகள் பி ஓ எஸ் இயந்திர மூலம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் நியாய விலை கடைகளில் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்கக் கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

நியாயவிலை கடைகளை சரியாக காலை 9 மணிக்கு திறந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காதவர்களை வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய குடிமகனாக இல்லாத யாருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது. ஒரே நபர் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்களை வாங்குபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு mail அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.