தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு?…. மாநில அரசுக்கு புதிய சிக்கல்…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு?….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 25,000-கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இதில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இவற்றின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள கடைகளுக்கு நேர கட்டுப்பாடு, திரையரங்குகள், பொது போக்குவரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அவற்றின் காரணமாக அங்கு தற்போது தொற்று குறைந்து வருகிறது. அதே பார்முலாவை தமிழகத்திலும் அப்ளை செய்யலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *