தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இலவசம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு கல்வியில் இந்திய அளவில் முக்கிய இடம் வகிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்துவது.

வருகின்ற 2025 ஆம் ஆண்டில் இந்திய அளவில் தமிழ்நாடு கல்வியின் முக்கிய இடத்தை வகிக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாட புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் . அதற்காக கட்டணம் வசூலித்தால் தொடர்புடைய பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *