“தமிழகம் முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும்”…. ஆளுநர் வேண்டுகோள்….!!

தமிழக திறந்த நிலை பல்கலைகழகத்தின் 13 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில் பலவிதமான யோசனைகளை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து நம்மிடம் தற்போது உள்ள கல்வி முறையை பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும்.

இது நாள் வரை நம் தேசத்தை பார்த்த பார்வை சற்று சரியாக இல்லை என்று சொல்ல வேண்டும். பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வோடு கல்விக் கொள்கையை அணுகி இருக்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக நம்மிடையே உள்ள ப பல்வேறு வேறுபாடுகள், பிரிவினை கருத்துக்களை தோற்றுவிக்கப்படுகிறது. மேலும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்த அனைவரும் முன்வரவேண்டும். திறந்தநிலை பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை பலரும் முழுமையாக படிக்கவில்லை. படிப்பை பாதியில் கைவிட்டு மீண்டும் தொடர புதிய கல்வி கொல்கையில் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *