தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு வேண்டிய பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதே சமயம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரசு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற அமுதம் அங்கன்வாடிகள் விரிவு படுத்தப்பட உள்ளன. டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் போட்டியை சமாளிப்பதற்கும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் கூடுதலாக அமுதம் அங்கன்வாடிகள்  தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.