தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அனைத்து நிலைகளிலும் உள்ள 4000 அலுவலர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணிக்க போவதாகவும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்வு காணவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.