தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது ஜூலை 11ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் வெளியானல் ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் வெளியானது  தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியில்லை. பாலபிஷேகம், கட்டவுட் மற்றும் பேனர்களுக்கு அனுமதி இல்லை,கூடுதல் விலைக்கு டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு விதித்துள்ளது.