தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.  மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் வகுப்புகள்  செயல்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தக்கூடிய காலம். எனவே தனியார் பள்ளிகள் பாடம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக இந்த விடுமுறையை படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply