தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி சலூன் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 24ஆம் தேதி அனைத்து சலூன் கடைகளும் மூடப்படும் நிலையில் முடி திருத்துதல் மற்றும் முகம் மழித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட மாட்டாது.

அன்றைய தினம் கல்வி, வேலைவாய்ப்புல் தனி உன் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டம் நடத்த இருக்கிறார்கள். மேலும் இதன் காரணமாக தான் அன்றைய தினம் சலூன் கடைகள் அனைத்தும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.