தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு…. உயர்கல்வித்துறை அதிரடி செக்…..!!!!

சென்னையில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களில் பலர் பேருந்து பயணம் செய்து வருகிறனர். இவர்களில் சில பேர் பேருந்துகளில் தகராறு செய்வது, கூரை மேல் ஏறி பயணம் மேற்கொள்வது, பஸ் டே எனும் பெயரில் அட்டூழியம் செய்வது, ஆயுதங்களுடன் மோதல்களில் ஈடுபடுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு செய்வது பிற பயணிகளுக்குத் தொல்லை தருவதுடன், மாணவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த அடிப்படையில் தமிழக கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது தமிழக அரசு உயர்கல்வித்துறை மற்றும் தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சில காலங்களாக மாணவர்கள் கல்லூரிக்கு வரும் போது பேருந்துகளில் தகராறு செய்வதும், கூரை மேல் ஏறி பயணம் மேற்கொள்வதும் மிகவும் அதிகரித்துள்ளது.

இதனை தடுப்பதற்கு கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் பேருந்து படிக்கட்டு மற்றும் ஜன்னல்களில் தொங்குவது, தகராறு செய்வது, கூரை மேல் பயணம் செய்வது ஆகியவற்றில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் காண வேண்டும். இதையடுத்து இந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து உளவியல் கவுன்சிலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்தகைய செயலில் இருந்து விலகி, கல்வியில் முன்னேறத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு கல்லூரியில் ஒரு பொறுப்பு அதிகாரியை நியமணம் செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *