தமிழகம் முழுவதும் கல்லுரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாசம் செமஸ்டர் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் மாணவர்கள் அனைவரும் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்காமல் நேரடி தேர்வு எழுத முடியாது போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தி பாடங்களை முடிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து மழையின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் வருகின்ற நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக விடுமுறை நாட்கள் வர உள்ளதால் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் மீண்டும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தி விரைந்து பாடங்களை முடிக்க வேண்டுமென்று உயர்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *