தமிழகம் முழுவதும் கட்டணம் உயர்வு?… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சுங்க கட்டணம் அதிகரிப்பால் லாரி வாடகை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சரக்கு லாரி மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.