தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வருகின்ற கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்களுடைய சுற்று வட்டாரங்களில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அரசு பள்ளியில் படித்தால் மாணவர்களுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். முந்தைய ஆண்டை விட இந்த கல்வியாண்டில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இன்று அட்மிஷன் போட்டு விடுங்கள்.