அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்த்து மொத்தமாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் அரசு ஊழியர்கள் சங்கம் 4 நாட்கள் விடுமுறை விடுமாறு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்தது.
அதனை ஈடு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று முழு நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் படி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் இன்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.