தமிழகம் முழுவதும்…. இன்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை -அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதைஎடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு 9-11 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்ற மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து மீண்டும் கொரோனா பரவியதன் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3ஆம் தேதி பொதுத்தேர்வு  நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழக மக்களும் வாக்குபதிவு நடைபெற்றதால் 12ஆம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டதன் காரணமாக இன்றும் 12 மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.