தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் இன்று விடுமுறை அளிக்க தவழும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடைப்பெறும் நாளான இன்று விடுமுறை அளிக்காத வரும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நல ஆணையம் அறிவித்துள்ளது. இதுபற்றி புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 9487269279, 9442540984, 8610308192, 9444647125, 7305280011, 004-24335107 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளது.