சேலம்:
மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டிதாதனூர், குள்ளம்பட்டி, வலசையூர் ஒரு பகுதி, பள்ளக்காடு, தாதனூர், வெள்ளியம்பட்டி, பருத்திக்காடு, பாலப்பட்டி, கூட்டாத் துப்பட்டி, விளாம்பட்டி, பூசாரிப்பட்டி, அனுப்பூர், கோலாத்துக்கோம்பை, நீர்முள்ளிக்குட்டை, ஏரிபுதூர், ஏ.என்.மங்கலம், எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருப்பூர்:
உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலைய பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டதால் இன்று மின்தடை ஏற்படாது என்று உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மதுரை:
திருமங்கலம் உட்கோட்டத்தினை சேர்ந்த ஆவல் சூரன்பட்டி அத்திப்பட்டி மற்றும் காரியாபட்டி துணை மின் நிலையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 3 மணி வரை ஆவல்சூரன்பட்டி, உன்னிபட்டி, சாப்டூர், செம்பட்டி, பழையூர், அத்திப்பட்டி, கண்மாய்பட்டி, காரியாபட்டி, தும்பக்குளம், வலையங்குளம், திருமால், கொக்குளம், புதுப்பட்டி மற்றும் கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருவள்ளுர்:
புதுகும்மிடிப்பூண்டியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, சிறுபுழல்பேட்டை,
பில்லா குப்பம், பாத்தபாளையம், காரம்பேடு பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. அதேபோல், கொரட்டூர், பாரதி நகர், முகப்பேர் ரோடு, காமராஜர் நகர், கஸ்தூரி நகர், அம்பத்தூர் முதல் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம், குழித்துறை, அருமனை, புத்தன்சந்தை மற்றும் கண்ணுமாமூடு துணை மின் நிலையத்துக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேல்பம்மம், வைகுண்டம், கல்லுதொட்டி, வெள்ளிவிளாகம், துண்டத்தாறவிளை, அம்மன்கோவில், சிதறால், வெள்ளாங்கோடு, அம்பலக்கடை, தேவிகோடு, ஆயவிளை, நாரகத்தன்குழி, பாக்கோடு, குருவில்விளை, மேழக்கோடு, வெட்டுக்குழி, வெள்ளச்சிபாறை மற்றும் குளப்பாறை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நெல்லை:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட திசையன்விளை, கோட்டைகருங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திசையன்விளை மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கோட்டைக் கருங்குளம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கோட்டை கருங்குளம், குமாரபுரம், வாழைத் தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம் சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், நான்குநேரி SEZ (AMRL) துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட நான்குநேரி, இராஜாக்கள் மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர் ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, AMRL தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்களில் மின் தடை ஏற்படும்.
விருதுநகர்:
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரியவள்ளிகுளம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வரும் (20-05-2023) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அஜீஸ்நகர், தேவா டெக்ஸ், மலையரசன் கோவில் ரோடு, புளியம்பட்டி, பஜார் , பழைய பேருந்து நிலையம், பாளையம்பட்டி, பெரிய வள்ளிக்குளம், சுக்கிலநத்தம், ஆமணக்குநத்தம், செட்டிகுறிச்சி, பந்தல்குடி, பரமேஸ்வரி மில், வெம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.