தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரி பார்த்து மாணவர்களுக்கு கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலில் பிழை இருந்தால் இயக்குனரகத்திற்கு தெரிவிக்கலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.