தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று  ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக அரசு எச்சரித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.