தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, மதுரை,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனை மீறி மதுக்கடைகள் திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.