தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!…

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் வழக்கம் போல் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-12 வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை. எனவே பொங்கல் விடுமுறை முடிந்ததால் இன்று முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும். ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் தொடரும் என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *