தமிழக முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் பலர் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை கூறி மருந்து நிலையங்களில் தாங்களாகவே மாத்திரைகளை வாங்குகின்றனர். இதனை தடுக்க மருந்து கட்டுப்பாட்டு துறை அடிக்கடி மருந்து விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகின்றது. என் நிலையில் சென்னை திருவான்மையூரில் உள்ள மருந்து கடைகளில் ஒரே மருந்து சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே மனநோய் மற்றும் தூக்க மாத்திரைகளின் முறையற்ற பயன்பாட்டை தவிர்ப்பதற்காக மருத்துவரின் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்று அனுமதிக்கப்பட்டிருந்த பட்சத்திலும் அந்த மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருந்து கடைகளில் இனி மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.