தமிழகம் முழுவதும் அதிரடி முடிவு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் …!!

மாதம்தோறும் மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா கால கட்டத்தில் மின் கட்டணம் கணக்கிடு செய்யப்பட்டதில் குளறுபடி நிகழ்ந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில்,  தமிழக அரசு அதனை மறுத்தது. மேலும் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமாகிய அமைச்சர் 40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய நிலையில்….  அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடைபெறுகின்றது ? என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த முறைதான் காலகாலமாக உள்ளத்தக்கவம் தெரிவித்தார் .

தற்போது அதிகளவில் இது சம்மந்தமான கோரிக்கை வைத்து வருவதால் இதுகுறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால கடந்த 40 நாட்களாக அமைச்சர்  எந்தவிதமான அரசு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.