தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்களின் குறைகளை கேட்டறிய 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமங்களில் உள்ள குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.