தமிழகம் அரசு சட்ட கல்லூரிகளில் இவர் படம் கட்டாயம்…… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

தேனி சேர்ந்த சசிகுமார் தன்னை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேலையிலும் சுதந்திரத்திற்காக அனைத்தையும் இழந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக இன்றும் பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கல்வி கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்சி விற்கும் கோரி உள்ளார். இந்த கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வன்முறை மனோபாவத்துடனும் தகாத வார்த்தைகளை பேசி மோசமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் வகுப்புகள் நடைபெறுவதற்கு இடையூறு செய்துள்ளார்.

இருப்பினும் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து மனுதாரர் ஏற்கனவே 2 வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனை போதுமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. தலைவர்களில் உருவப்படத்தை வைப்பது குறித்து ஏற்கனவே எழுந்த பல விவாகரங்களில் 9 தலைவர்களின் உருவப்படங்கள் பொது அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வைக்கப்படலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணை உள்ளது. அதன்படி தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அறையிலும் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுவிட்டது. அது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பாளர் சமூக நீதியின் அடையாளம் அவரது பங்கு ஈடு செய்ய இயலாது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவருக்கும் அவர் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சென்னை சட்ட கல்வியின் இயக்குனர் தமிழகத்தின் அனைத்து அரசு சட்டக் கல்லூரியிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது குறித்து சுற்றறிக்கை அனுப்ப இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது மனுதாரரை நீதிமன்றம் கடுமையாகவே கையாண்டது. மனுதாரரின் கல்வி இதோடு முடிந்து விடக்கூடாது என்பதை அதன் நோக்கம். உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு அறிஞர் நல வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் மனுதாரருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கொண்டு மனுதாரார் சட்ட புத்தகங்களை வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் “கற்பி, ஒன்று சேர்; புரட்சிசெய்” என்பது டாக்டர் அம்பேத்கரின் பொன்மொழி. மனுதாரர் அடுத்த 2 ஆண்டுகளில் அவற்றின் முதலாவதான ‘கற்பி’ என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த உத்தரவை பிறப்பிக்கும் இந்த நேரம் நீதிமன்ற அறையை பார்க்கிறேன். இங்க டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் இல்லை. எனவே விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *