தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்ட செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்தை விதிமுறைகளில் ஈடுபடுவோரின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமல் படுத்தி உள்ளனர். தற்போது சென்னையில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகின்றது.