சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் அண்ணாமலை மிகுந்த கோபம் கொண்டார்.
அவர் தோல்வியடைந்த மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். அதன் பிறகு அவர்களை ஷூ காலால் எட்டி உதைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் பலரும் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.