பெஞ்சல் புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் பண்ருட்டி அண்ணா கிராமம் கடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசளித்து வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக பல பள்ளிகளில் பாடத்திட்டத்தை முடிக்க போதிய கால அவகாசம் இல்லை. திட்டமிட்டபடி வருகிற ஒன்பதாம் தேதி அரையாண்டு தேர்வுகளை தொடங்கினால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அதனை கருத்தில் கொண்டு அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.