தமிழ்நாட்டைப் போலவே கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ‘X’ தளத்தில் அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தைகள் நன்கு கற்பதற்கு, அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்வது முக்கியம்.

கனடாவின் புதிய ‘தேசிய பள்ளி உணவுத் திட்டம்’ குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். குழந்தைகளின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இந்த திட்டம் உதவும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.