தமிழகத்தை தொடர்ந்து…. புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைகிறது…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டபோது தமிழகத்தின் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் மீதான வாட் வரி 3% குறைப்பதற்கான அமைச்சரவை முடிவுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.43 குறையும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *