தமிழகத்தில் 93,200 குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள்…. அரசின் அசத்தலான திட்டம்….!!!!

தமிழ்நாடு அரசு அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளை தீர்க்கும் அடிப்படையில் பல புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என மொத்தம் இதுவரையிலும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 32,51,509 பேர் பயனடைந்து வருகின்றனர். இதற்கென தமிழ்நாடு அரசு ரூ.2,765 கோடியை கடந்த வருடம் செலவிட்டது.

இப்போது நடப்பு ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு குறித்த சோதனைகளை அரசு மேற்கொண்டு உள்ளது. அதில் 6 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பல சத்து நிறைந்த உணவு பொருட்கள் அடங்கிய உணவு பெட்டகமும், 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களும் அரசு வழங்கி உள்ளது. ஆகவே அங்கன்வாடி மையம் வாயிலாக இந்த திட்டம் குறித்த தகவல்களை அறிந்துகொண்டு மக்கள் பயனடைய வேண்டும் என சமூகநலத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply