தமிழகத்தில் 846 Lockdown Zone…. கடும் கட்டுப்பாடு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா தொடர்பான தகவல் பெறவோ, அது பற்றி தெரிவிக்கவோ 24 மணி நேரமும் 104 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தலைமைச் செயலாளர் ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.