தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம். அதனால் இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *