தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது .வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *