தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தர‌ ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகராட்சி சைபர் குற்ற பிரிவு ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் ஆக இருந்த தீபா சத்யன் சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கொளத்தூர் துணை ஆணையராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு டிஜிபி அலுவலகத்தில் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராவலி பிரியா கந்தபுனேனி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.