தமிழகத்தில் சமீபத்தில் 8000-க்கும் மேற்பட்ட சத்துணவு உதவி பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் 12 மாதங்கள் வரை வேலை பார்ப்பவர்களில் சிறப்பான முறையில் பணிபுரிபவர்கள் தகுதி ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 3000 ரூபாய் முதல் 9000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது மற்றொரு காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 4000 பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனையடுத்து உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்து விளங்குவதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மேலும் உயர்கல்வித்துறையில் விரைவில் 4000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.