தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் ஒருவர்தான் அய்யா வைகுண்ட சாமிகள். இவரை சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் வணங்குகின்றனர். வைகுண்ட சுவாமிகள் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக திருநெல்வேலி,கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.