தமிழகத்தில் 2,748 பணியிடங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் துறைவாரியாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளாக நடைபெற்ற வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க நவம்பர் 7ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்க வேண்டும்.நவம்பர் 30ஆம் தேதி எழுத்து தேர்வு மற்றும் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.