தமிழகத்தில் 20 புதிய சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 3-வது நாளாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இந்நிலையில் தேக்கம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? என்று பேரவையில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் வரும் நிதியாண்டில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.