தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளையும் 12 மாவட்டங்களில் கனமழையும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் எனக் கூறியுள்ளது.