தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் ஆக பழனிசாமியின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிங்ஸ் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக இருந்த நந்தகோபால் தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேரூராட்சிகள் இயக்குனராக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டாளர் கிரண் குராலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகர்ப்புற மேம்பாட்டு இயக்குனராக இருந்த செல்வராஜ் தற்போது தமிழ் துறை மேம்பாடு மற்றும் தகவல் துறையை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக அணில் மேசராம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனராக சரவண வேல்ராஜ் என மொத்தம் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.