“தமிழகத்தில் 11 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள நெல் சேமிப்பு கிடங்குகள்” அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இவர் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியை 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அமைச்சர் சக்கராபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். விவசாயிகள் எந்த இடத்தில் நேரடி கொள்முதல் நிலையம் வேண்டும் என்று விருப்பப்படுகிறார்களோ அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக 2 நேரடி கொள்முதல் நிலையங்கள் கூட திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2,52,636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதோடு, 819 நேரடி கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 740 நெல் கொள்முதல் நிலையங்கள் தான் செயல்பட்டது. திறந்த நிலையில் கொள்முதல் நிலையங்கள் இருக்ககூடாது என்பதற்காக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது 11 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள நெல்லை சேமிக்கும் விதமாக சேமிப்பு கிடங்குகள் கட்ட‌ உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.