தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் , கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.