தமிழகத்தில் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. கல்வித்துறை முடிவு?

தமிழ்நாடு முழுவதும் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைய  தொடங்கியதை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும்  10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வர இருக்கும் பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் முடிந்த நிலையில் வரும் 18 ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை மூன்றாவது திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்தாக, 25 ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மாணவர்கள் தரப்பில் இருந்து பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்ட அடிப்படையில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, சேலம் மாவட்டத்தில் 80 மாணவ மாணவிகள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத்தேர்வு எழுதும் போது மன அழுத்தத்துடன் எழுதக்கூடாது எனவே பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து இருந்து காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *