தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு தேர்வுகள் இயக்ககம் துணை தேர்வு அறிவித்தது.

இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று ஜூன் 20-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூலை நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.